பாக்கியாவிற்கு அட்வைஸ் கூறிய கோபி பொங்கி எழுந்த பாக்கியா வெளியான ப்ரமோ

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி குடும்பத்திற்காக பாக்கியாவிற்கு அட்வைஸ் செய்து வரும் நிலையில், பாக்கியா சட்டென கோபத்தில் பேசியுள்ளார்.

பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.

கணவர் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும், தான் செய்ய வேண்டிய கடமைகளை தற்போது வரை பாக்கியா சரியாக செய்து அசத்தி வருகின்றார்.

தற்போது உடல்நிலை சரியில்லாததால் கோபி பாக்கியா வீட்டில் இருந்து வரும் நிலையில், ஈஸ்வரி இருவரையும் சேர்த்து வைப்பதற்கு திட்டம் தீட்டி வருகின்றார்.

ஆனால் இதற்கு பாக்கியா வளைந்து கொடுக்காமல் தனது முடிவில் உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் இதுவரை கிரிமினலாக இருந்த கோபியா? என்று கேட்டு அளவிற்கு அவரது தத்துவப் பேச்சு அமைந்துள்ளது.