துளசி என்பது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒரு செடியாகும். இந்த செடியை மூலிகைகளின் ராணி என அழைகப்படுகின்றன. இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
இது 50 சென்டி மீட்டர் வரை வளரக் கூடியது. இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இந்த செடி ஆன்டி ஃபங்கல், ஆன்டி வைரஸ் மற்றும் ஆன்டி பாக்டீரியா குணங்களை கொண்டுள்ளது.
இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இந்த செடியை எளிதாக பெற்றுக்கொள்ளலாம். இதை மூலிகையாகவும் பயன்படுத்தலாம். உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
இதை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அனைத்து விதமான அற்புத நன்மைகளையும் நம்மால் பெற்று கொள்ள முடியும்.
துளசியில் ஜிங்க் மற்றும் வைட்டமின் C உள்ளது, இது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆன்டி பாக்டீரியா, ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி வைரஸ் பண்புகளையும் கொண்டுள்ளது.
இதனால் தொற்றுநோய்கள் எளிதில் வராமல் தடுக்கிறது. துளசியை உட்கொள்வது செல்களின் செயல்பாட்டைக் தடுக்க உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
துளசியில் பல வகை துளசிகள் உண்டு. அவை கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, நாய் துளசி, நிலத்துளசி, முள் துளசி, கற்பூர துளசி என அதிக துளசி வகைகள் உள்ளன.
உலகளவில் பெரிதும் அறியப்படும் ஆரோக்கிய மூலிகை, துளசி. இதில் வைட்டமின் ஏ,சி மற்றும் கே சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது கிருமிகளை அகற்றும் என்பதால் கோவில்களில் கிளை முதல் வேர் வரை பயன்படுத்துகின்றனர்.
இதை ஜலதோஷம், காய்ச்சல்,ஆஸ்துமா,மன அழுத்தம்,நீரிழிவு,இதய நோய், மலேரியா,கல்லீரல் நோய், வயிற்றுப்போக்கு மற்றும் தூக்கமின்மை போன்றவற்றுக்கு இது மூலிகையாக்கப்படுகின்றது.
துளசியை உணவாக சேர்த்தல்
துளசியை பச்சையாகவும் உண்ணலாம். சமைத்தும் உண்ணலாம். சமைத்து உண்ணும் போது இதை ரசமாக வைத்து உண்ணலாம். கோடை வெயிலின் தாக்கம் குறையும் போது தழைக்காலம் ஆரம்பதாகும்.
இந்த நேரத்தில் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் தலைவலி, தலைபாரம் என்பவை நம்மை எளிதில் அண்டாமல் இருக்க இந்த துளசி மூலிகையாக பயன்படுகிறது.
எனவே துளசியில் ரசம் செய்து அதை வாரம் ஒரு முறை சாப்பிடுதல் அவசியம். இது தவிர இதை வைத்து காலையில் சட்னி செய்யலாம். இதை நமது வழக்கதான உணவுடன் உட்கொள்ள முடியும்.
துளசியின் மருத்துவ குணங்கள்
துளசி ஒரு இயற்கை மூலிகை மருந்தாகும். இதை நாம் பல வகைகளில் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம்.துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கவும்.
துளசி நீர் ஆரோக்கியமானது மற்றும் நாள் முழுவதும் உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க ஒரு சிறந்த வழியாகிறது. துளசி இலைகளை தண்ணீரில் ஊறப்போட்டு சில மணிநேரம் கழித்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் நாட்பட்ட வாயு, வயிற்று உப்பிசம் நீங்கும்.
துளசி இலைச்சாறு ஒரு சக்தி மிகுந்த கிருமி நாசினியாகவும், ரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையை போக்கும்.
தினமும் 20 துளசி இலையை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் ஆரம்பநிலையில் உள்ள புற்று நோய் குணமாகும். துளசி உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
பெண்களுக்கு தாதவிடாய் காலங்களில் குளித்து முடித்த பின் துளசி விதையை நீருடன் ஊறவைத்து நெல்லிக்காய் அளவு 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கருப்பை தூய்மை அடைந்து கருப்பை பலம் பெறும்.
தோல் நோய்களான படை, சொரி, சிரங்குகளை துளசி இலையால் குணமடையச் செய்யலாம். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் தோல் நோய்கள் அண்டாது.
துளசி கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளின் வளர்சிதை மாற்றத்தை எளிதாக்குகிறது. சர்க்கரை நோயாளியின் ரத்தத்தில் சர்க்கரை அளவின் தாக்கத்தை குறைக்க துளசி பயன்படுத்தலாம்.
இதன் மூலம் சர்க்கரை நோய் தீவிரமாகாமல் கட்டுக்குள் இருக்கும். துளசி இலைகளில் அடாப்டோஜன்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் உடலில் உள்ள மனஅழுத்த அளவைக் குறைக்க உதவும்.
துளசியை எப்படி மருந்தாக பயன்படுத்தலாம்
இதில் தற்போது எல்லா மனிதர்களிடமும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை எடை அதிகரிப்பு. இதற்கு துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்கு பின்பு உட்கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும்.
அனேகமானோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ரத்த அழுத்தப்பிரச்சனையும் ஒன்றாகும். இதற்கு துளசி இலை, முற்றிய முருங்கை இலைகளை சம அளவு எடுத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த சாற்றில் 50 மில்லி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சாற்றுடன் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.
இதை சாப்பிடும் போது அன்றாட உணவில் உப்பு புளி காரம் குறைக்க வேண்டும். தோல் நோய்கள் இருந்தால் துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து பற்று போடலாம்.
துளசி இலையுடன், அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு குறையுமாம். இது சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
நல்ல தண்ணீர் எடுத்து அதில் சில துளசி இலைகளை போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது.
அத்துடன் தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும். வியர்வை நாற்றம் அதிகமாக வந்தால் கவலை தேவை இல்லை.
குளிக்கும் நீரில் முதல் நாளே துளசி இலைகளை ஊறவைத்து அந்த நீர் கொண்டு குளிக்க வேண்டும். இப்படி செய்தால் வியர்வை துர்நாற்றம் இருக்காது.