அஜித்தை இயக்கும் முயற்சியில் சூப்பர்ஹிட் இயக்குனர்.

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அந்த இரண்டு படங்களுக்கே இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.

சமீபத்தில் விடாமுயற்சி பட ஷூட்டிங்கில் இருக்கும் அஜித்தின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி இருந்தது. மேலும் விடாமுயற்சி அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாவதும் உறுதியாகி இருக்கிறது.

வெங்கட் பிரபு

அடுத்து அஜித் யாருடன் கூட்டணி சேர போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. சிறுத்தை சிவா உடன் மீண்டும் அவர் கூட்டணி சேர போகிறார் என ஒரு செய்தியும் உலா வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்தை மீண்டும் இயக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம். இதற்கு முன்பு மங்காத்தா என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணையுமா என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் விஜய்யின் GOAT படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். அதில் AI மூலமாக விஜய்யின் இளமை லுக் கொண்டு வந்திருந்தார் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.