இந்த பழக்கம் இருந்தால் உங்களை செல்வத்திலிருந்து வறுமைக்கு தள்ளி விடுமாம்!

உலகளவில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக சாணக்கிய நீதி திகழ்கின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.

இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏராளம் போர் இருக்கின்றனர்.வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக இருந்துள்ளது.

அந்த வகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் குறிப்பட்ட சில பழக்கங்கள் உங்களின் ஒட்டுமொத்த செல்வத்தையும் அழித்து உங்களை முற்றிலும் வறுமையில் தள்ளும் என சாணக்கியர் எச்சரித்துள்ளார்.

அப்படி வறுமையை ஏற்படுத்தக்கூடிய பழக்கங்கள் என்னென்ன என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

வறுமையை ஏற்படுத்தும் பழக்கங்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம் பணத்தை தவறான வழியில் சம்பாதிக்கும் பழக்கம் கொண்டவர்கள் எவ்வளவு சீக்கிரம் பணத்தை சம்பாதித்தார்களே, அதை விட விரைவில் அந்த பணத்தை இழந்து வறுமை நிலையை அடைவார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.

மற்றவர்களை ஏமாற்றி சேத்த பணமும் மற்றவர்களுக்கு துன்பத்தை கொடுத்து பெறப்பட்ட பணடும் விரைவில் அழிந்து போகும். அப்படி சம்பாத்த பணம் உங்களிடம் ஏற்கனவே இருக்கும் செல்வத்தையும் சேர்த்து இல்லாமல் செய்து விடும்.

சாணக்கியர் கூற்றுப்படி மற்றவர்களுக்கு துரோகம் செய்து சம்பாதித்த பணம் நீண்ட காலம் நிலைக்காது. அப்படிப்பட்ட பணம் கையில் இல்லாமல் இருப்பதே சிறந்தது.

எப்பொழுதும் கடின உழைப்பாலும், நற்செயல்களாலும் மட்டுமே செல்வத்தை ஈட்ட வேண்டும். என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். சட்டத்துக்கு புறட்பான அல்லது கடவுளுக்கு விரோதமான பாவச்செயல்களில் இருந்து சம்பாதித்த பணம் பிற்காலத்தில் எதிர்ப்பாராத அளவுக்கு உங்களை வறுமையில் தள்ளும்.

சாணக்கிய நீதியின் அடிப்படையில் வரவுக்கு மீறிய செலவு செய்யும் பழக்கம் கொண்டவர்கள் வெகு விரைவில் வறுமையில் தள்ளப்படுவார்கள். பணத்தின் மதிப்பு தெரிந்து செலவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

வருமானத்தை விட அதிகமாக செலவு செய்பவர்கள் வாழ்க்கையில் பல பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க வேண்டி ஏற்படும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். இந்த பழக்கம் மிகவும் ஆபத்தாக சூழ்நிலைக்கு உங்களை கொண்டுச்செல்லும் என சாணக்கியர் எச்சரித்துள்ளார்.

பணத்தை திட்டமிட்டு செலவு செய்யும் பழக்கம் அற்றவர்கள் செல்வத்தை எப்படி இழக்கின்றார்கள் என்பதே தெரியாமல் விரைவில் வறுமைக்கு செல்வார்கள். இவர்கள் வாழ்வை மீளவே முடியாத கடன் பிரச்சினைகள் சூழும்.

பணத்தை சரியாக முகாமைத்துவம் செய்யும் திறமை மற்றும் பழக்கம் கொண்டவர்கள் தான் வாழ்வில் அதிக பணத்தை சம்பாதிக்கவும் அதனை சரியாக வழயில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கவும் செய்கின்றார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.