ரஷியா – உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டு காலமாக போர் நடந்து வரும் நிலையில் சமரசத்திற்கு ரஷ்யா தயாராக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன், நேட்டோ அமைப்புடன் இணைய இருந்த நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் மீது போரை தொடங்கியது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகியுள்ளனர். ரஷ்யா தனது படைபலத்தின் போதாமையால் வடகொரியாவிலிருந்தும் வீரர்களை இறக்கி போரை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த ஆண்டில் அவர் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.
அதேசமயம் முன்னதாக அவர் வெற்றி பெற்றபோது ரஷ்ய அதிபர் புதினுக்கு போன் செய்து போர் நிறுத்தம் குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.