விடாமுயற்சி படத்தில் இணைந்த புது நடிகை.

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. ரிலீசுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் அஜித் மற்றும் திரிஷா இருவரும் ஷூட்டிங்கில் ஜோடியாக இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது.

இந்நிலையில் தற்போது பிரபல சின்னத்திரை தொகுப்பாளரையும், நடிகையுமான ரம்யா சுப்ரமணியன் விடாமுயற்சி படத்தில் இணைத்து இருக்கிறார்.

அவர் அஜித் உடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை பதிவிட்டு இதை லைகா நிறுவனமே அறிவித்து இருக்கிறது.