எதிர்நீச்சல் 2 சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையொருவர் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல் 2
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எதிர்நீச்சல் 2 சீரியல் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த சீரியலை முதல் பாகத்தை எடுத்த சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வம் தான் இயக்குகிறார். முதல் பாகத்தை போன்று இந்த கதைக்களமும் வேறொரு கோணத்தில் வெளிவரும் என எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்த நேரத்தில் சொல்லியிருந்தார்.
அதே போன்று முதல் பாகம் முடிவில் இருந்து இரண்டாம் பாகம் ஆரம்பிக்கின்றது. முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் மாத்திரமே இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்கள். அதில் முக்கியமானவராக இருந்த நாயகி மதுமிதா சீரியல் இருந்து விலகி இருக்கிறார்.
நாயகியாகும் விஜே பார்வதி
ஜனனி கேரக்டரில் விஜே பார்வதி நடித்திருக்கிறார். இவர், ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான சீரியலில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். நடிகை தேவயாணிக்கு மருமகளாக நடித்த பார்வதி தற்போது இந்த சீரியலில் ஜனனியாக நடிக்கிறார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் ஆதி குணசேகரன் ஆக மீண்டும் அதே வேலராம மூர்த்தி தான் தொடர்வதாக தெரிகிறது. ஏற்கனவே மாரிமுத்து நடித்து வந்த கேரக்டரில் வேலராமமூர்த்தி நடிப்பது குறித்து அதிகமான விமர்சனங்கள் எழுந்து வந்தன.
ஆனாலும் இயக்குனர் வேலராமமூர்த்தி தான் இந்த சீரியலுக்கு சரியாக இருக்கிறார் என்று கூறியிருந்தார். இதன் காரணமாக அவரும் இரண்டாவது பாகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
அத்துடன் முதல் பாகத்தில் வீட்டிற்குள் எதிர்நீச்சல் அடித்த குணசேகரன் வீட்டுப் பெண்கள் இப்போது வெளி உலகத்தில் எதிர்நீச்சல் அடிப்பது போன்று கதைக்களம் நகரவுள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைக்கு வாய்ப்பு
இந்த நிலையில், எதிர்நீச்சல் 2 சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியாக நடிக்கும் சல்மா அருண் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர், ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் வில்லியாக நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் டாப் சீரியலாக சென்றுக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.
தற்போது சல்மா அருண் எதிர்நீச்சல் சீரியலிலும் வில்லியாக நடிக்கப் போகிறாரா? அல்லது பாசிட்டிவ் கேரக்டரில் வரப்போகிறாரா? என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது. ஆனால் தற்போது வந்த ப்ரோமோக்களில் சல்மா காட்டப்படவில்லை.
அதே நேரத்தில் சல்மா இந்த சீரியலில் எந்த மேக்கப்பும் இல்லாமல் புடவையில் எளிமையாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
இதனை கவனித்த ரசிகர்கள், சல்மாவின் கதாபாத்திரம் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.