100 வயது மட்டும் வாழணும் என்று ஆசையா அப்போ “இத” சாப்பிடுங்க

ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளில் தீபகற்பத்தில் உள்ள மக்கள் 105 வரை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

இது போன்ற நாடுகளில் தீபகற்பத்தில் வாழும் வயதானவர்கள் 105 வரை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ என்ன காரணம் என பலரும் தேடி வருகிறார்கள்.

இதனை சித்த மருத்துவர் ஒருவர் மிக அழகாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார்.

அதில், “ஜப்பானில் ஒகினாவா என்ற இடம் உள்ளது. அதே போன்று இத்தாலி, காஸ்டாரிக்காவில் உள்ள தீபகற்பத்தில் வாழும் மக்களின் சராசரி வாழ்க்கை காலம் 103,105 என கணக்கிடப்பட்டுள்ளது.

அங்கிருந்த வயதான மூதாட்டியிடம் கேட்ட போது, அவர் சில விஷயங்கள் குறித்து தெளிவாக பேசியுள்ளார்.

100 வயதிற்கு மேல் வாழ என்ன காரணம்?
அதாவது, தினமும் தோட்டத்திற்கு சென்று செடிகளை பராமரிப்பது மற்றும் அங்குள்ள காய்கறிகளை பராமரிப்பு ஆகிய நாங்கள் செய்யும் முக்கிய வேலைகளில் ஒன்றாக உள்ளது.

பர்பிள் நிறத்தில் விளையும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தான் நாங்கள் விரும்பி சாப்பிடுவோம். அத்துடன் இறைச்சி வகைகள் அதிலும் குறிப்பாக மீன் வகைகளை தான் நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்.

சந்தையில் கிடைக்க கூடிய குணா, சல்மா போன்ற மீன் வகைகள் சாப்பிடுவார்கள். அதன் பின்னர் காய்கறிகள், கீரை வகைகளையும் தினமும் உணவுடன் சேர்த்து கொள்வார்கள். எப்போதும் 80% மட்டுமே சாப்பிட வேண்டும்.

அதே சமயம், ஜப்பானின் “இகிகாய்” வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் எப்போதும் மகிழ்ச்சியான மனநிலை இருக்கும்.” என பேசியுள்ளார்.

குறித்த பாட்டியின் பேச்சில் மகிழ்ச்சியும், நிறைவும் இருந்தது. ஆரோக்கியமாக வாழ்ந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி என மருத்துவர் கூறுகிறார்.