பொதுவாக வாழைப்பழம் சாப்பிட்ட பின்னர் அதிலுள்ள தோலை நாம் குப்பையில் வீசி விடுவோம். ஆனால் பழத்தை போன்று வாழைப்பழ தோலில் சத்துக்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறப்படுகின்றது.
வாழை மரத்தைப் போல மனித வாழ்க்கையும் வேறில்லாத தாவரம் என பலரும் கூறுவார்கள். அதிலும் குறிப்பாக வாழையின் எல்லா பகுதிகளும் மனிதனுக்கு பயன் தருகின்றது.
அந்த வகையில், வாழை இலையில் உணவு சாப்பிடலாம், வாழைக்காய் சமைத்து சாப்பிடலாம், வாழைப் பழம் சாப்பிடலாம், வாழைத் தண்டும் சமைத்து சாப்பிடலாம், வாழை நார் பூக்கள் கட்டுவதற்கு பயன்படுகிறது. இவற்றை போன்று வாழைப்பழத்தின் தோலையும் வைத்து நிறைய வேலைகள் செய்யலாம்.
அப்படியாயின் வாழைப்பழத் தோலை தூக்கி வீசாமல் எப்படி செடிகளுக்கு உரமாக மாற்றுவது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். வாழைப்பழத் தோலில், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளது.
இதனை குப்பையில் போடாமல் உரமாக பயன்படுத்தினால் செடிகள் நன்கு வளரும்.
உரம் தயாரிப்பது எப்படி?
வீடுகளில் ஒரு லிட்டர் குளிர்பான பிளாஸ்டிக் காலி கேன் இருக்கும், அதனை எடுத்து மேல் பகுதிக்கு கீழே துண்டாக வெட்டவும்.
மூடியில் துளை போட்டு மேல் பகுதி ஒரு புனல் போல் சரியாக வைத்து கொள்ளவும். அடுத்து, வாழைப் பழத்தோலை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அதனை பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு அவை நிரம்ப தண்ணீர் ஊற்ற வேண்டும். சுமாராக 3 நாளுக்கு மூடி வைக்கவும். 3 நாட்களுக்கு பின்னர் பார்க்கும் பொழுது தண்ணீர் கருப்பாக மாறியிருக்கும்.
இப்போது இந்த தண்ணீரை நாம் ஏற்கெனவே பிளாஸ்டிக் கேனில் வெட்டி வைத்துள்ள புனல் மூலம் வேறு ஒரு பிளாஸ்டிக் கப்பில் வைத்து இந்த தண்ணீரை ஊற்றி வடிகட்டவும்.
இந்த தண்ணீரை அப்படியே வீடுகளில் உள்ள செடிகளுக்கு ஊற்றலாம்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் செடிகள் நன்றாக வளர்வதோடு விரைவாக பூக்கவும் காய்க்கவும் செய்யும்.
செலவில்லாமல் வாழப்பழத்தோலை பயன்படுத்தி பயிர்களுக்கு புத்துயிர் கொடுக்கலாம்.