கோடிகளில்புரளும் தமன்னாவின் சொத்து மதிப்பு!

நடிகை தமன்னாவின் 35 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை தமன்னா
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது மொத்த நடிப்பு திறமையையும் வெளிக்காட்டி சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டவர் தான் தமன்னா.

அதனை தொடர்ந்து அவரின் நிறம் மற்றும் நடிப்பு திறமையால், தமன்னாவுக்கு பல மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்தது.

தமிழிலும் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடத்த தமன்னா தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

தமிழில் அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்ததுடன் அதில் தமன்னாவின் நடனத்துக்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது. தமன்னா ஜெயிலர் படத்தில் ‘காவாலயா’ பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து வசூலில் சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான ‘ஸ்த்ரி 2’ படத்திலும் இவர் நடனமாடிய ஆஜ் கிராத் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாறி குவித்தது.

நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா, 2025ல் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் கசிந்துள்ளது.

இந்நிலையில் இன்று தனது 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடிவரும் தமன்னாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் இணையதில் வலம்வருகின்றது.

சொத்து மதிப்பு
நடிகை தமன்னாவின் மொத்த சொத்து மதிப்பு 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி ரூ. 120 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகின்றார். ஒரு பாடலில் மட்டும் நமனம் ஆடுவதற்கு தமன்னா 3 முதல் 4 கோடிவரையில் சம்பளம் பெறுகின்றார்.

மேலும் மும்பையில் உள்ளபிரம்மாண்ட வீட்டின் மதிப்பு ரூ. 16 கோடி முதல் ரூ. 20 கோடி வரையில் இருக்கும். மும்பையில் உள்ள தமன்னாவின் அபார்ட்மென்டின் விலை ரூ. சுமார் 7 கோடி இருக்கும்.

அதுமட்டுமன்றி BMW 320i – ரூ. 43 லட்சம், Mercedes Benz – ரூ. 1 கோடி, Mitsubishi Pajero Sport – ரூ. 29 லட்சம், Land Rover Range Rover Discovery Sport – ரூ. 75 லட்சம் மதிப்புள்ள பல சொகுசு கார்களையும் தமன்னா வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.