மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா முழுவதும் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு பற்றாக்குறையால் போராடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அந்த எண்ணிக்கை 52 மில்லியனாக உயரும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய அறிக்கையின்படி, உலக உணவுத் திட்டம் 3.4 மில்லியன் மக்கள் தற்போது “பசியின் அவசர நிலைகளை” எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது.
மோதல், இடப்பெயர்ச்சி, பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் கடுமையான காலநிலை அதிர்ச்சிகள் ஆகியவை உணவுப் பாதுகாப்பின்மையைத் தூண்டுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.