பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் ரஞ்சித் வெளியேறியுள்ளார். 75 நாட்களை கடந்து பிக் பாஸ் வீட்டிற்குள் பயணித்து வந்த ரஞ்சித், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இவர் ஏன் இவ்வளவு நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார் என்றும் மக்கள் விமர்சித்தனர். ஆனால், கடந்த வாரம் தன்மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வெறித்தனமான விளையாடினார்.
ஆனாலும் கூட, மக்களிடையே குறைவான வாக்குகள் பெற்றதன் காரணமாக, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். எலிமினேஷன் செய்யப்பட்ட ரஞ்சித்தின் பிக் பாஸ் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ரஞ்சித் சம்பளம்
பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு ரூ. 50 ஆயிரம் சம்பளமாக பெற்று வந்துள்ளார் ரஞ்சித். ஒரு நாளைக்கு ரூ. 50 ஆயிரம் என்கிற கணக்கில் 75 நாட்களை கடந்துள்ள ரஞ்சித் ரூ. 37 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம். ஆனால், இதில் குறிப்பிட்ட சதவீதம் வரி போக, மீதம் தான் அவருடைய சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.