கனடாவில் போலி தாதியர் சேவை செய்த பெண்ணிற்கு சிறை!

கனடாவில் போலியாக தாதியர் சேவையில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

குறித்த பெண் பல மாகாணங்களில் சில மாகாணங்களில் தாதியாக சேவையாற்றியுள்ளார்.
எனினும் தாதியர் சேவையில் ஈடுபடுவதற்கான தகுதிகள் எதுவும் இல்லாத நிலையில் குறித்த பெண் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் சேவையில் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சேவையை வழங்கியுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு பிரிட்டிஷ் கொலம்பிய நீதிமன்றம் தண்டனை வகித்துள்ளது. பிரிகேட் கிளாரொக்ஸ் என்ற பெண்ணே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.