தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள விஜயின் கோட் திரைப்படம்

2024ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் தளபதி விஜய்யின் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படமும் இதுவே ஆகும்.

ஹீரோவாகவும், வில்லனாகவும் இப்படத்தில் கலக்கியிருந்தார் விஜய். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்திருந்தனர்.

உலகளவில் ரூ. 440 கோடி வசூல் செய்து கோட். இந்த நிலையில், திரையரங்கம் மற்றும் OTT-யில் கொண்டாடப்பட்ட கோட் திரைப்படம் விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

ஆம், கோட் படத்தை விரைவில் ஒளிபரப்பாக போவதாக ஜீ தமிழ் அறிவித்துள்ளனர். ஆனால், எந்த நாளில், எந்த நேரத்தில் ஒளிபரப்பப்போகிறோம் என தெரிவிக்கவில்லை. அநேகமாக 2025 புத்தாண்டு அன்று ஜீ தமிழில் கோட் படம் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.