அடுத்த ஆண்டு ஆரம்பமே திருவிழா என்பதே போல் அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. விடாமுயற்சி படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தொகுப்பாளினி ரம்யா படத்தில் இணைந்துள்ளார் என அறிவித்தனர்.
ப்ரீ புக்கிங் வசூல்
நேற்று விடாமுயற்சி படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் துவங்கியது. இந்த நிலையில், ப்ரீ புக்கிங்கில் இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, யூகே மற்றும் அயர்லாந்தில் ப்ரீ புக்கிங் ஆரம்பமான நிலையில், இதுவரை ரூ. 8.5 லட்சம் வரை வசூல் வந்துள்ளது. துணிவு படத்தை விட, விடாமுயற்சி படத்திற்கு ப்ரீ புக்கிங் சிறப்பான ஒப்பனிங் கொடுத்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.