தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக பிரபலமாகி, இன்று உலகளவில் தனக்கென்று தனி ரசிகர்களை உருவாக்கியுள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.
இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் புஷ்பா 2. உலகளவில் 6 நாட்களில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து இமாலய வசூல் சாதனையை படைத்தது.
இந்திய சினிமாவில் குறுகிய நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.
வசூல்
இந்த நிலையிலும், புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ. 1590 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் இப்படம் ரூ. 2000 கோடி வசூல் செய்யும் என்றும் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். அது நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.