மேஷம்
வாகன வசதிப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர் நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
ரிஷபம்
சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
மிதுனம்
பயணங்களால் பயனடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
கடகம்
விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
கன்னி
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். வளைந்து கொடுத்து செல்ல வேண்டிய நாள்.
துலாம்
வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். சபைகளில் மரியாதை கிடைக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மதிப்பு மரியாதை கூடும் நாள்.
தனுசு
பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
மகரம்
இதுவரை இருந்த அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இழு பறியாக இருந்த வேலைகள் முடிவடையும். விலகி நின்ற உறவுகள் விரும்பி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.
கும்பம்
சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான வேலைகள் பல பார்க்க வேண்டி வரும். மற்றவர்களின் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச்சொல் ஏற்படும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டிவரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
மீனம்
மனைவி வழியில் ஆதரவு பெருகும். ஆடை ஆபரணம் சேரும். தாயாரின் உடல் நிலை சீராகும். தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைகளை உடனடியாக முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்