எதிர் நீச்சல் சீரியலில் ஈஸ்வரியை காண ஏங்கும் மாமியார்

எதிர்நீச்சல் சீரியல் இன்று ஆரம்பமாகும் நிலையில், இதன் ப்ரொமோ காட்சி வெளியாகி பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகியது. இதில் குணசேகரனாக நடித்த மாரிமுத்து திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த பின்பு இந்த சீரியலின் கதை மிக விரைவில் நிறுத்தப்பட்டது.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்த வந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு இடையே மாட்டிக் கொண்ட பெண்கள் அதிலிருந்து மீள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்து வெளியே வருவது போன்ற காட்சி அமைந்தது.

இந்நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் கதை எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகைகளில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மட்டும் மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில், மூத்த மருமகள் ஈஸ்வரியை எப்பொழுதும் திட்டிக் கொண்டிருக்கும் மாமியார், தற்போது முடியாத நிலையில் அவரைக் காண்பதற்காக ஏங்குகின்றார்.

ப்ரொமோவில் ஈஸ்வரி கணவர் குடும்பத்திற்கு சம்பந்தம் இல்லாத இடத்தில் தனியாக வாழ்ந்து வருவது போன்று காட்டப்பட்டுள்ளது. தர்ஷனும் ஈஸ்வரியை அதிகாரமாக அழைக்கின்றார். ஈஸ்வரி மீண்டும் இந்த குடும்பத்திற்குள் வருவாளா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.