கனடாவின் பொருளாதாரம் தொடர்பில் வெளியாகிய செய்தி!

கனடாவின் பொருளாதாரம் தொடர்பில் அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி கடந்த ஒக்ரோபர் மாதம் பொருளாதாரம் 0.3 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

சுரங்கத்தொழில், கனிய வள அகழ்வு, எரிவாயு அகழ்வு போன்ற துறைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக பொருட்கள் உற்பத்தி துறையில் வீழ்ச்சி பதிவாகியிருந்த நிலையில் ஒக்ரோபர் மாதம் 0.9 வீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.