கனடாவில் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது!

கனடாவின் பிரம்டன் பகுதியில் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரம்டனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட மூன்று பேரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பீல் பிராந்திய பொலிஸார் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள் எவ்வித ஆபத்தும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.