இந்த ராசிக்கார ஆண்களை திருமணம் செய்வது வரமாம்!

ஜோதிட சாஸ்திரதின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும்.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் எதிர்காலத்தில் தங்களுக்கு மனைவியாக வரும் பெண்ணை இளவரசி போல் பார்த்துக்கொள்வார்கள்.

இந்த ராசி ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். காரணம் அவர்கள் தங்களின் மனைவியை தேவதையாகவே பார்த்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

காதல் மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி ஆண்கள் காதல் விடயத்தில் துணைக்கு உண்மையாகவும் விசுவாசிகளாகவும் திகழ்வார்கள்.

தங்களின் மனைவியை சகல செல்வ செழிப்புடனும் வாழ்நாள் முழுவதும் மகிழ்சியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்கள் எப்பொழுதும் சுக்கிரனின் ஆசியால், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதுடன் மனைவிக்கும் அந்த வாழ்வை கொடுக்கின்றார்கள்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பதால், இவர்களுக்கு தன்னம்பிக்கை சற்று அதிகமாகவே இருக்கும்

தனித்துவமான குணங்களை கொண்ட இவர்கள் காதல் விடயத்தில் அதிக ஈடுபாடும் நேர்மை குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் வாழ்க்கை துணையின் ஆசைகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்.

மனைவியை மகிழ்ச்சியாகவும் திருப்பதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பார்கள்.

துலாம்
சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசியினர் உறவுகள் மீமு அதிக ஈடுபாடும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் இயற்கையாகவே ரொமான்டிக்கானவர்களாக இருப்பார்கள். மனைவியை ஒரு இளவரசி போல் நடத்துவார்கள்.

மனைவியின் ஆசைகள் அனைத்தையம் கேட்காமலேயே நிறைவேற்றுவதில் இவர்கள் வல்லவர்கள். வாழ்க்கை துணையின் உறவை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள்.