ரோகினி பற்றிய உண்மைகளை மனோஜுன் முன்னாள் காதலி ஜீவா குடும்பத்தினர் முன்னாள் மொத்தமாக போட்டு உடைக்கிறார்.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் முன்னாள் காதலி ஜீவா அண்ணாமலை வீட்டில் வந்து மொத்த ரகசியத்தையும் கூறுகிறார்.
இத்தனை நாட்கள் ஆசைப்பட்டது போன்று ரோகிணியின் பித்தலாட்டங்கள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளது. மனோஜுடம் இருந்து காதலி எடுத்து சென்ற 30 லட்சம் பணத்தை ரோகிணியிடம் பொலிஸ் நிலையத்தில் வைத்து திருப்பிக் கொடுத்துள்ளார்.
மீனாவின் தங்கை மூலமாக ஜீவா பற்றிய ரகசியம் முத்துக்கு தெரிய வருகிறது. இதனால் கடுப்பான முத்து ஜீவாவிடம் சென்று பணம் குறித்து விசாரிக்கிறார்.
அதற்கு அவர்,“நான் ஏற்கனவே உங்க அண்ணனிடம் 27 லட்சத்துக்கு வட்டியோட சேர்த்து 30 லட்சம் கொடுத்துட்டேன்.
முத்துவிற்கு தெரியவரும் உண்மை
உங்க அண்ணனை விட உங்க அண்ணி தான் ரொம்ப டேஞ்சர். அவங்க தான் என்ன மிரட்டி பணத்தை வாங்குனாங்க. போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பணத்தை கொடுத்தாச்சு. அதற்கு எனக்கு சாட்சி கையெழுத்து போட்டதே நீ தானே..” என கூறுகிறார்.
அதன் பின்னர் முத்து, “மொத்த உண்மையையும் நீங்களே வீட்டில் வந்து சொல்லுங்க..” என ஜீவாவை வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
ஜீவாவை வீட்டில் பார்த்ததும் விஜயா,“ நீதானே என்னுடைய பையனிடம் இருந்து ஏமாத்தி 27 லட்சம் பணத்தை கொண்டுட்டு ஓடினவ என்று திட்ட, நான் 30 லட்சம் உங்க பையன் கிட்ட கொடுத்தாச்சு. உங்க பையனும் மருமகளும் என்னை மிரட்டி அந்த பணத்தை வாங்குனாங்க..” என போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்ட ரசீதுடன் கூறுகிறார்.
ரோகினிக்கு விழுந்த அறை
இதனை கேட்ட விஜயா,“நீ என்கிட்ட இந்த விஷயத்தையும் என்கிட்ட மறைச்சிட்டியே..” என அடிக்கிறார்.
அதற்கு மனோஜ், “தப்பு என் மேல இல்லம்மா இந்த பணத்தை அப்படியே பிசினஸ் பண்ணலாம் என்று எனக்கு பிளான் போட்டு தந்ததே ரோகிணி தான் மா, ரோகிணி சொன்னதால தான் நான் இதை உங்ககிட்ட சொல்லல..” என அனைத்தையும் பயத்தில் போட்டு உடைக்கிறார்.
இதெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த விஜயா பளார் என்று ரோகிணி கன்னத்தில் அறைக்கிறார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.