குளிர்காலத்தில் காலிஃபிளவர் சாப்பிட்டால் எடை குறையுமா?

குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க விரும்பினால் உணவில் அடிக்கடி காலிஃபிளவர் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனின் குளிர் காலங்களில் காலிஃபிளவர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பல அற்புதமான நன்மைகளை தருகின்றது.

காலிஃபிளவர் ஒரு குளிர்கால காய்கறியாகும். இதுவே காலிஃபிளவரின் பருவகாலம் எனலாம். சூடான காலிஃபிளவர் சில்லி செய்து சாப்பிட்டால் கோழி இறைச்சியை விட சுவை அதிகமாக இருக்கும்.

காலிஃப்ளவரை வைத்து கோபி 65, காலிஃப்ளவர் பிரியாணி, காலிஃபிளவர் ஃப்ரை போன்றவை இதில் சமைக்க முடியும். இது சுவைக்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

இவ்வளவு சிறப்பு கொண்ட காலிஃப்ளவரில் வைட்டமின் சி, கே, ஃபைபர், ஃபோலேட், வைட்டமின் பி, பொட்டாசியம், புரதம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடல் எடையை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.

அந்த வகையில், குளிர்காலத்தில் காலிஃபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

குளிர்காலத்தில் காலிஃபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
1. குளிர்காலத்தில் விரைவாக எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் காலிஃபிளவர் சேர்த்துக் கொள்ளலாம். இது எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடாது. அத்துடன் காலிஃபிளவரில் நார்ச்சத்து மற்றும் கலோரிகள் உள்ளன. இது பசியை கட்டுக்குள் வைத்து எடையை அதிகரிக்க விடாமல் தடுக்கிறது.

2. காலிஃபிளவரில் வைட்டமின் சி உள்ளது. இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். அதே வேளை, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ பிராக்டிகல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது. காலிஃபிளவரில் உள்ள வைட்டமின் சி மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் வெள்ளை இரத்த அணுக்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் தொற்றுநோயை எதிர்த்து போராட வைக்கிறது.

3. காலிஃபிளவரில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் ஒரு முக்கியமான கனிமமாகும். இது உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பாமரிக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவி செய்கின்றன.

4. நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட காய்கறி வகையான காலிஃபிளவரை சாப்பிட்டால் செரிமான அமைப்பு சீராக இயங்கும். மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சினையுள்ளவர்கள் இதனை உணவுடன் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம். அதே போன்று முட்டைக்கோஸில் உள்ள குளுக்கோராஃபைன் வயிறு தொடர்பான நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. அத்துடன் குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.