ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கொத்தமல்லி சட்னி!

கோடைகாலமாக இருந்தாலும் மழைக்காலமாக இருந்தாலும் நாம் நமது உணவு விடயத்தில் கவனமாக இருப்பது அவசியம். அந்த வகையில் நாம் எப்போதும் சாப்பிடக்கூடிய உணவை ஆரோக்கியமாக சாப்பிட கற்றுக்கொள்ள வேண்டும்.

பல சமையலுக்கு பயன்படும் கொத்தமல்லி இலைகளை வைத்து சட்னி செய்வது வழக்கம். இந்த சட்னி கசப்பாக இருப்பதால் பலரும் விரும்புவது இல்லை.

கொத்தமல்லி சட்னி செய்யும் போது அதில் சில விஷயங்களை கவனித்து செய்தால் மட்டுமே கசப்பில்லாத சட்னி கிடைக்கும்.

கொத்தமல்லி நச்சு நீக்கியாகவும் இரத்த உருவாக்கத்தை அதிகரிப்பதற்கும் பயன்படுகின்றது. இந்த சட்னியை கசப்பில்லாமல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

கொத்தமல்லி சட்னியில் கசப்பை தவிர்க்க வேண்டியது
1. கொத்தமல்லி சட்னி செய்யும் போது அதன் இலைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இந்த இலைகளில் அழுக்குகள் படிந்து காணப்படுவதால் சட்னி கசப்பாக மாறும்.

எனவே கொத்தமல்லி இலைகளில் உள்ள அசுத்தங்களை அகற்ற வேண்டும் என்றால் அதை பல முறை கழுவ வேண்டும்.

2.கொத்தமல்லி சட்னியில் தசாலாப்பொருட்களை பயன்படுத்தும் போது அது சமநிலையாக இருப்பது அவசியம். சட்னியில் இஞ்சி பூண்டு போடும் போது அது காரத்திற்கு தகுந்ததை போல போடுவது அவசியம்.

இதை கொஞ்சமாக செர்க்க வேண்டும். அதாவது கடுகளவில் சேர்க்கலாம். இல்லை என்றால் இவை சட்னியை கசப்பாக மாற்றும்.

3.கசப்பை நடுநிலையாக்குவதில் அமிலத்தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சட்னியில் அமிலத்தன்னை நிறைந்த எலுமிச்சைகளை பேயன்படுத்தலாம். இது சட்னியில் சகப்பை நீக்கி சுவையை அதிகரிக்க உதவும்.

4.கொத்தமல்லி சட்னி செய்யும் போது அதில் சுவையை அதிகரிக்க புதினா இலைகளை போடுவது அவசியம். கொத்தமல்லி சட்னி செய்யும் போது கசப்பை தவிர்க்க அதில் புதிய புதினாக்கள் சேர்க்க வேண்டும்.