2024-ஆம் ஆண்டில் பலிக்காமல் போன பாபா வங்கா கணிப்புகள்

2024ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அடுத்த வருடம் குறித்து மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதனை தொடர்ந்து புது வருடம் யாருக்கு எப்படி அமைய போகின்றது என்பதனை ஜோதிட வல்லுநர்கள் கணித்து சில பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இவர்களின் கணிப்பை மேலை நாடுகளிலேயே ஒரு கூட்டத்தார் கவனித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதன்படி, தன்னுடைய யதார்த்தமான கணிப்பால் 85 சதவீதமான கருத்துக்களை உண்மையாக்கியவர் தான் பாபா வங்கா. இவரின் கருத்துக்கள் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் இவர் இந்த வருடம் ஆரம்பத்தில் கூறிய கணிப்புகளில் ஒரு சில கணிப்புகள் பலிக்காமல் உள்ளது.

இது குறித்து தேடிப் பார்த்த போது பல்தரப்பட்ட உண்மைகள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் பலிக்காத பாபா வாங்காவின் கணிப்புகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

பாபா வாங்காவின் கணிப்புகள்
1. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் பாரியளவு பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் பெரியதாக உலகளாவிய நிதி நெருக்கடிகள், வளர்ந்த நாடுகளின் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டது. பாபா வாங்கா கூறியது போன்று பெரியளவு எதுவும் நடக்கவில்லை.

2. 2024 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் இதுவரை இல்லாத அளவு நிலை மாறி வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட வெப்பமான ஆண்டாக மாறக்கூடும். இவர் கூறியது போன்று வெப்பம் ஏற்பட்டு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால் வெப்பத்தை விட மழையினால் ஏற்பட்ட அழிவுகள் தான் அதிகமாக உள்ளது.

3. 2024 ஆண்டு ஆரம்பிக்கும் பொழுது பாபா வாங்காவின் கணிப்பின் படி சக்திவாய்ந்த தேசத்தால் உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. இவர் கூறியது படி பார்த்தால் ரஷ்யாவின் நடவடிக்கைகள் காரணமாக உலகம் போரின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும், இன்னும் உலகப்போர் உருவாகுவதற்கான சூழல் உருவாகவில்லை.

4. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளில் ஒரு கட்டத்தில் இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மோதல் வெடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது எந்தளவு உண்மை என கூறமுடியாது.