கன்னட திரையுல படங்கள் தற்போதெல்லாம் இந்தியளவில் நல்ல ரீச் ஆகிறது கே ஜி எப்-க்கு பிறகு, அந்த வகையில் கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சுதீப் நடிப்பில் தாணு தயாரிப்பில் விஜய் கார்த்தி கேயன் இயக்கத்தில் வெளிவந்துள்ள மேக்ஸ் எப்படியுள்ள பார்ப்போம்.
கதைக்களம்
மிகவும் தைரியமான எதற்கும் அஞ்சாத இன்ஸ்பெக்டர் சுதீப் ட்ரான்பர் ஆகி ஒரு புது ஸ்டேஷனில் டூட்டிக்கு ஜாயின் செய்கிறார். டூட்டிக்கு முன்பே அரசியல் பிரபலம் மகன்கள் தாறுமாறாக கார் ஓட்டி போலிஸாரிடம் சண்டை போடுவதை பார்த்து சுதீப் கைது செய்கிறார்.
அவர் கைது செய்துவிட்டு வீட்டிற்கு போக, போலிஸ் ஸ்டேஷனில் இருந்தவர்கள் எல்லோரும் ஒரு வேலை என ஸ்டேஷனை பூட்டி விட்டு செல்ல, வந்து பார்க்கும் போது அந்த இரு கைதிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி போலிஸ் துப்பாக்கியால் சுட்டு இறந்துள்ளனர்.
இதை பார்த்த எல்லோருக்கும் கடும் ஷாக் வர, அதே நேரத்தில் அங்கிருந்த CCTV-யும் வேலை செய்யாமல் இருக்க, கண்டிப்பாக இதை செய்தது போலிஸ் தான் என நினைத்து விடுவார்களோ என்று எண்ணி எல்லா போலிஸாரும் அஞ்ச, இந்த பிரச்சனைகளை எல்லாம் சுதீப் எப்படி தீர்த்தார் என்ற பரபரப்பான திரைக்கதையே இந்த படம்.
படத்தை பற்றிய அலசல்
லோகேஷ் எப்போது கன் கலாச்சாரத்தை கையில் எடுத்தாரோ பிரஷாந்த் நீல் எப்போது ஒன் மேன் ஆர்மியாக எல்லோரையும் அடித்து துவைப்பது போல் எடுத்தாரோ, இந்த இரண்டையும் மிக்ஸ் செய்தது போல் தான் தற்போதெல்லாம் அனைத்து பேன் இந்தியா படங்களும் வருகிறது.
அதில் ஒரு வகையாக வந்துள்ள படம் தான் மேக்ஸ். அதிலும் லோகேஷின் கைதி படத்தின் ஹெவி இன்ஸ்பிரிஷனில் வெளிவந்துள்ளது. சுதீப் ஒன் மேன் ஆர்மியாக தன் ஸ்டேஷனில் இரண்டு கைதிகள் இறந்துள்ளார்கள், அவர்களை தேடி ஒரு மிகப்பெரும் அரசியல் அடியாட்கள் மற்றும் கேங்ஸ்டர்கள் குவிய சிங்கிள் ஹாண்டில் எப்படி டீல் செய்கிறார் என்று பார்த்தால், சூப்பர் ஹீரோவை எல்லாம் மிஞ்சும் சாகசம் தான், அவருடைய ரசிகர்களுக்கும் மாஸ் பட விரும்பிகளுக்கும் செம விருந்து தான்.
அதிலும் எவ்வளவு பெரிய விஷயம் என்றாலும் அதை கூலாக அவர் ஹாண்டில் செய்யும் விதம் ரசிக்க வைக்கின்றது. படம் சவுத் இந்தியா முழுவதும் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக நம்ம ஊர் நடிகர்களான இளவரசுவிற்கு மிகவும் வலுவான கதாபாத்திரம் கொடுத்துள்ளனர், அவரும் அதை சிறப்பாக செய்துள்ளார், கொஞ்சம் கைதி பட மரியம் ஜார்ஜையும் நியாபகப்படுத்துகிறார்.
படம் முழுவதுமே ஆக்ஷன் ஆக்ஷன் தான், எப்படி அந்த இரண்டு மரணத்தையும் சுதீப் மறைக்கின்றார், தன்னையே நம்பி இருக்கும் காவலாளிகளை எப்படி காப்பாத்துகின்றார் என்ற பதட்டம், அவர்களை போலவே ஆடியன்ஸுக்கும் படம் முழுவதும் தொற்றிக்கொள்கின்றது, படம் ஜெட் வேகத்தில் பரபரவென செல்வது கூடுதல் பலம்.
அதிலும் எதிராளிகளை திசை திருப்பி 10 நிமிடம் டைம் கேட்டு சுதீப் செய்யும் சாகசங்கள் லாஜிக் மீறல்கள் என்றாலும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது. லாஜிக் என்றதும் தான் நியாபகம் வருகிறது, அதெல்லாம் படத்தில் இருக்கிறதா முதலில் என தோன்றுகின்றது, ஏனெனில் துளி அளவு கூட லாஜிக் என்பது இல்லை, குறிப்பாக 10 இடத்தில் பிரச்சனை இருந்தாலும், சுதீப் 10-யையும் முடித்து வைக்கின்றார், அது பிரச்சனையில்லை, அந்த 10 இடத்திலும் சுதீப் அவரே அடுத்தடுத்து வருவது இவர் எப்படி ப்ளாஷ் போல் ஓடி வருகிறாரா என்று தான் கேட்க தோன்றுகின்றது.
படத்தின் ஒளிப்பதிவு சூப்பர் படம் முழுவதும் இரவு என்பதால், ஒளிப்பதிவு மிக முக்கியம் என்பதை உணர்ந்து நைட் எபேக்ட் காட்சிகளை கூட தெளிவாக காட்டியுள்ளனர். இசை பாடல்கள் சோதனை, பின்னணி இசை சூப்பர்.
க்ளாப்ஸ்
படத்தின் ஆக்ஷன் காட்சிகள்
விறுவிறுவென செல்லும் திரைக்கதை
சுதீப் நடிப்பு
பல்ப்ஸ்
ஆக்ஷன் படம் தான் அதற்காக இவ்வளவு லாஜிக் மீறல்கள் எல்லாம் கொஞ்சம் கம்மி செய்திருக்கலாம்.
மொத்தத்தில் லாஜிக் பார்க்காமல் அமர்ந்தால் மெகா ‘MAX’ Entertainment தான்.