அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்து குறித்து ஊகங்களைப் பரப்பவேண்டாம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் நேற்று முன்தினம் (25 டிசம்பர்) கஸக்ஸ்தானில் (Kazakhstan) விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கு ரஷ்யாவே காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் விசாரணை முடிவதற்குள் எவ்வகையிலும் ஊகங்களை வெளியிடுவது தவறு என்று கிரெம்ளின் (Kremlin) மாளிகைப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொவ் (Dmitry Peskov) கூறினார்.
அதோடு விசாரணை நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் விமான விபத்து அஸர்பைஜான் மக்களுக்குப் மாபெரும் துயரம் என அஸர்பைஜான் அதிபர் இல்ஹம் அலியெவ் (Ilham Aliyev) கூறினார்.