சிறுநீரகத்தில் கல்லை உருவாக்கும் தவறுகள்

பொதுவாக நம்மிள் பலருக்கு இருக்கும் நோய்களில் ஒன்று தான் சிறுநீரக கல்.

இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள்.

சில மரபியல் காரணங்கள், மோசமான உணவு பழக்கங்கள், சர்க்கரை நோய், கீழ்வாதம் போன்ற காரணங்களால் சிறுநீரக கல் பிரச்சினை ஏற்படுகின்றது.

அந்த வகையில், சிறுநீரக கல் பிரச்சினை ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து எமது பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சிறுநீரகத்தில் கல்லை உண்டுபண்ணும் தவறுகள்

1. உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத பட்சத்தில் சிறுநீரக கற்கள்கள் ஏற்படலாம். எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். அதிலும் குறிப்பாக ஆண்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. சிலர் பேக் செய்யப்பட்ட உணவுகள், உப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் சோடியம் அதிகம் உள்ள உணவுகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது நாளடைவில் அவர்களுக்கு சிறுநீரக கல் பிரச்சினையை ஏற்படுத்தும். எப்போதாவது வெளியில் சாப்பிடுங்கள். ஆனால் வெளியில் சாப்பிடுவதை பழக்கமாக வைத்து கொள்ளாதீர்கள்.

3. அசைவ பிரியர்கள் பெரும்பாலும் இறைச்சி வகைகள் தான் விரும்பி சாப்பிடுவார்கள். இறைச்சி வகைகளில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. இதனை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளும் பொழுது சிறுநீரக கற்களை ஏற்படுத்தும்.

4. சிறுநீரக கல் உருவாவதை தடுக்க நினைப்பவர்கள் அடிக்கடி அவர்களின் உணவுடன் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதனை ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிட வேண்டும்.

5. சாக்லேட், டீ, காபி ஆல்கஹால் மற்றும் நட்ஸ்கள் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஏனெனின் இதுவும் சிறுநீரக கல் பிரச்சினையை ஏற்படுத்தும்.