ரசிகர்கள்நடிகர் நாகார்ஜுனா தனது மருமகள் சோபிதா துலிபாலாவைப் பற்றிய தன்னுடைய கருத்துக்களை சமீபத்தில் கூறிய நிலையில் அவை வைரலாகி வருகின்றன.
நாக சைதன்யா
நடிகை சோபிதா திரைப்படங்களை விட ஓடிடியில் தான் தன் நடிப்பு திறமையை காட்டி ரசிகர்களை உழைத்து வைத்துள்ளார். இவர் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானார்.
இந்த நிலையில் பிரபல நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யாவை ஆகஸ்ட் 8 ஆம் தேதி, குடும்பத்தினர் சம்மதத்துடன் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
பின்னர் டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நாக சைதன்யா-சோபிதா திருமணம் எளிமையாக நடந்தது. 300 பேர் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்பட்டனர்.
நாக சைதன்யா – சோபிதா விருப்பப்படி திருமணம் எளிமையாக நடந்ததாக நாகார்ஜுனா விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் நாகார்ஜுனா தனது மருமகள் பற்றி பேசியுள்ளார்.
நாகசைதன்யாவை சோபிதா காதலிக்க முன்பிருந்து சோபிதாவுடன் பழக்கம் வைத்துள்ளாராம். எப்போதும் அமைதியாக இருப்பார்.
நாக சைதன்யாவின் மனைவியாக சோபிதா வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று நாகார்ஜுனா கூறினார். நாகர்ஜீனா சோபிதாவை முழுமனதுடன் தன் மகளாக ஏற்றுக்கொண்டுள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.