இசையமைப்பாளராக களமிறங்க, நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார்கள் பிரபலங்கள்.
அதில் 2005ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சுக்கிரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி முன்னணி நடிகராகவும் இப்போது வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி.
தொடர்ந்து படங்கள் நடித்து வந்தவர் இப்போது அதிக இசைக் கச்சேரிகள் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
விஜய் ஆண்டனி தொடர்ந்து நிறைய இசைக் கச்சேரிகளை நடத்திவரும் நிலையில் இன்று அவரின் 3.0 லைவ் கான்செட் சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற இருந்தது.
ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சியை வேறு ஒரு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அவரது அறிக்கை,