வெங்கட் பிரபுவின் படம் குறித்த அப்டேட்

2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படமாக இருக்கிறது தளபதி விஜய்யின் கோட். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

உலகளவில் ரூ. 440 கோடி வசூல் செய்திருந்தாலும், கடுமையான விமர்சனங்களை கோட் எதிர்கொண்டது. கோட் படத்திற்கு பின் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப்போகிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

மேலும் அஜித்துடன் மீண்டும் இணையப்போகிறார் என்றும் திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. அதே போல் சென்னை 28 பாகம் மூன்று எடுக்க திட்டமிட்டு வருகிறார் வெங்கட் பிரபு என்றும் கூறப்பட்டது.

பாலிவுட் எண்ட்ரி

இப்படி பல தகவல்கள் உலா வரும் நிலையில் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கப்போகிறாராம் வெங்கட் பிரபு.

அக்ஷய் குமாரை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.