பெருங்காயம் இல்லாத இந்திய சமையலை நினைத்துப் பார்க்கவே முடியாது. துளி அளவு பெருங்காயத்தூள் சேர்த்தாலே சாம்பார், ரசம் கமகமக்கும். பெருங்காயம் வெறும் மணமூட்டி மற்றும் சுவையூட்டி மட்டுமல்ல, அதில் ஏராளமான ஆரோக்கிய பலன்களும் உள்ளன.
* மணமான பெருங்காயத்தைப் பொடித்து, ஒரு டம்ளர் மோரில் சிறிது கலந்து பருகினால் உடல் குளிர்ச்சியாகும்.
* வாயுவின் அளவை அதிகரிக்கச் செய்யும் காய்கறிகளை சமைக்கும் போது பெருங்காயம் சேர்த்தால் வாயுத் தன்மை மட்டுப்படும்.
* பருப்பால் உண்டாகும் வாயுவை கட்டுப்படுத்த சமையலில் பெருங்காயம் சேர்ப்பது நல்லது.
* நெஞ்சின் நடுப்பகுதியில் வாயுவால் ஏற்படும் வலியைப் போக்க, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு சிறிது, திப்பிலி 4 பங்கு எடுத்து செம்முள்ளி கீரைச்சாற்றில் அரைத்து, மாத்திரைகளாக்கி காய வைத்து, காலையும், மாலையும் ஒரு வாரம் சாப்பிட்டால் போதும்.
* ரத்தத்தை சூடாக்கி, நரம்புகளை பலப்படுத்தும் பெருங்காயம்.
* பெருங்காயம் வைரஸ் எதிர்ப்பு தன்மை கொண்டது.
* பெருங்காயத்தை நீர் விட்டு அரைத்து மார்பில் பற்று போட்டால் கக்குவான் இருமல் பிரச்னை தீரும்.
* இது குடலில் உள்ளிருக்கும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை குறைக்கிறது. அதனால் குடல் ஆரோக்கியத்தை காக்கிறது. குடல் புண், குடல் புழுக்கள் போன்ற பிரச்னைகளையும் தீர்க்கிறது.ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழல் அழற்சி ஏற்படும் சமயங்களில் பெருங்காயத்தை உட்கொண்டால் உடனே தீர்வு காணலாம்.
* சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்து மூச்சு விட சிரமப்படும் சமயங்களில் பெருங்காயத்தூளில் சிறிதளவு வெந்நீர் இரண்டு, மூன்று சொட்டு விட்டு கரைத்து அதனுடைய தொண்டையிலும் நெஞ்சிலும் தடவி விட்டால் சளி, இருமல் சரியாகும்.
* வயிறு வீக்கம், வயிற்று வலியால் அவதிப்படுவோருக்கு ஒரு டம்ளர் வெந்நீரில் அல்லது மோரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை கலந்து குடித்தால் வயிற்று வலி சரியாகும்.