ஆண்களை விட பெண்களுக்கு எந்த வயதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம்.
பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் சமநிலையின்மையை சில அறிகுறிகள் வைத்து கண்டறியலாம்.
இவற்றை முன்கூட்டியே கண்டறிவதால் அதனால் ஏற்படும் விளைவுகளை கட்டுக்குள் வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில், ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஹார்மோன் சமநிலையின்மை
1. பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பத்து வயது முதல் ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக அவர்களுக்கு மனச்சோர்வு, அதிக தூக்கம், உடல் எடை கூடுவது, மன உளைச்சல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2. சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில், சீரான ரத்தப்போக்கு இருக்காது. முதல் இரண்டு நாட்களிலேயே ரத்தப்போக்கு நின்று விடும். இன்னும் சிலருக்கு மாதவிடாய் காலம் முடிந்தும் ரத்த போக்கு இருக்கும்.
3. ஹார்மோன் சமநிலையின்மையால் அவஸ்தை அனுபவிக்கும் ஒருவர், திருமணத்திற்கு பின்னர் அதிகமாக பாதிக்கப்படுவார். உதாரணமாக கருத்தரிப்பதில் சிக்கல், கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியில் குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
4. முப்பது வயது கடந்தவர்கள் உடல் பருமன் அதிகரிப்பினால் அவஸ்தைப்படுவார்கள். இதனை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து தகுந்த சிகிச்சை வழங்க வேண்டும்.
5. ஹார்மோன் குறைபாடு உள்ள பெண்கள் தைராய்டு நோயால் பாதிக்கப்படுவார்கள். இது ஹைபர் தைராய்டு (Hyper thyroidism) மற்றும் ஹைபோ தைராய்டு (Hypothyroidism) என இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றது. இதனை பெண்கள் ஆரம்ப காலங்களில் கண்டறிந்து உரிய சிகிச்சையளிக்க வேண்டும்.
6. ஹார்மோன் குறைபாடு என்பது பரம்பரை நோயல்ல. இருந்தாலும் தைராய்டு போன்ற சில நோய்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் அது மற்றவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.