தலைக்கு குளிக்கும் பொது செய்யக் கூடாத தவறுகள்!

தலைக்கு குளிப்பதற்கு எமது முன்னோர்கள் பல வரைமுறைகளை வைத்திருக்கிறார்கள்.

ஆண்களும் பெண்களும் வாரத்தில் இரு முறை தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இந்த பழக்கம் நாளடைவில் மாறி, தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கமே இல்லாமல் போயுள்ளது.

தினமும் தலைக்கு குளிக்கும் முன் குறைந்தது ஒரு மணி நேரமாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும்.

குளிக்கும் போது நேரடியாக ஷவரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அந்த வகையில், குளிக்கும் பொழுது தவிர்க்க வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

குளிக்கும் பொழுது தவிர்க்க வேண்டிய விடயங்கள்

1. தலைக்கு ஷாம்பு போட்டு தேய்க்கும் மென்மையாக கையாள வேண்டும். சிலர் குளிக்கும் பொழுது சீக்கிரம் குளிக்க வேண்டும் என்று அவசரமாக தேய்ப்பார்கள். இது முடி உதிர்வை அதிகப்படுத்தும்.

2. பெரும்பாலானவர்களுக்கு தலைக்கு குளிக்கும் போது அதிக முறை ஷாம்பு பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அதிகமான அழுக்குகள் தலையில் இருக்கும் பொழுது ஷாம்பு கொஞ்சம் அதிகம் பயன்படுத்தலாம். ஆனால் ஷாம்பு பயன்படுத்துவதால் தலைமுடி பாதிக்கப்படுவதுடன், வறட்சியும் ஏற்படும்.

3. இந்தியாவில் அதிகமான மக்கள் ஷாம்பு பயன்படுத்திய பின் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவதில்லை. தலைக்கு குளிக்கும் பொழுது ஷாம்பு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் கண்டிஷனர். ஷாம்புவிற்கு பின் கண்டிஷனர் பயன்படுத்தும் பொழுது தலைமுடி உதிர்வு தடுக்கப்படுகின்றது.

4. சூடான நீரில் குளிப்பதை ஒரு சிலர் பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த பழக்கத்தினால் நாளடைவில் அவர்களின் தலைமுடியை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் தலையில் பொடுகு, மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.