கணவனை காண சென்ற மனைவி பிள்ளைகள் மாயம்!

கொழும்பில் வேலை செய்யும் தனது கணவனை காண சென்று காணாமல் போன மனைவி மற்றும் குழந்தை இன்றுவரை கிடைக்கவில்லை என குறித்த கணவன் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 27ஆம் திகதி கொழும்பில் தொழில் செய்யும் தன் கணவனை சந்திப்பதற்காக மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி தன் குழந்தையுடன் பேருந்தில் அதிகவேக சாலை ஊடாக கடவத்தை வரை வந்துள்ளார்.

அதுவரை தன் கணவரோடு தொடர்பில் இருந்த மனைவியின் தொலைபேசி கடவத்தை வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்தி கணவன் தங்கியிருக்கும் இடத்துக்கு வருவதாகக் கூறியதோடு தொடர்புகள் நிறுத்தப்படுகிறது.

இதனையடுத்து, குழந்தையும், தாயும் 28ஆம் திகதி வரை கணவன் தங்கியிருந்த இடத்திற்கு வருகை தராததையடுத்து தொடர்ந்து அவர்களை தேடத் தொடங்கிய நிலையில் இன்று வரை (30-12-2024) குழந்தையோ, தாயோ கிடைக்கப்பெறவில்லை என இது தொடர்பில் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கணவன் வெளிநாட்டிலிருக்கும்போது குறித்த பெண்ணுக்கு பிற நபரொருவருடன் ஏற்பட்ட தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறும் வருகின்றன.