களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக கூறப்படும் மனைவி நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பாணந்துறை, அலுபோமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய மனைவியே கைது செய்யப்பட்டுள்ளார்
உணவு பொதிக்குள் போதைப்பொருள்
சந்தேக நபரான மனைவி களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு கொடுப்பதற்காக உணவு பொதி ஒன்றையும், சிறை கூண்டைச் சுத்தம் செய்வதற்கு தும்புத்தடி ஒன்றையும் சிறைச்சாலைக்கு நேற்றைய தினம் கொண்டு சென்றுள்ளார்.
இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபரான மனைவி கொண்டு சென்ற தும்புத்தடியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ்,ஹெரோயின் மற்றும் ஹேஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 10 இலட்சம் ரூபா ஆகும். கைதான மனைவி மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.