அநுர அரசாங்கத்திற்கு தலையிடியாக உள்ள அரச அதிகாரிகள்!

இலங்கையின் அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாக இருப்பது அரச அதிகாரிகளேயாகும் என சமூக ஆர்வலர் ஜீவன் பிரசாத் என்பவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் முகநூலில் தெரிவித்ததாவது,

அதிகாரிகள் இன்னமும், புதிய அரச கொள்கைகளை செயல்படுத்துவதற்கு தயாராக இல்லை.

இது தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த (JVP) விரைவில் அரச அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டிவரும் என நேற்று எச்சரித்திருந்தார்.

அதேபோல அமைச்சர் ஹந்துன்நெத்தி, அரசு சொல்வதை அரச அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். உங்களது பழைய நடைமுறைகளை அல்ல என கடுமையாக சாடி இருந்தார்.

சர்வதேச நாணய நிதியம் தேவையற்ற அரச பணியாளர்களை குறைக்க வேண்டும் என அறிவித்ததை போல, இலங்கையில் இனி பெரிய அரச துறையை கொண்டிருக்க முடியாது எனவும், அரச ஊழியர்களின் எண்ணிக்கையை விரைவில் குறைக்க வேண்டும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தற்போதைய செலவீனத்தை திறைசேரியால் தாங்க முடியாது என தெரிவித்த சிரேஷ்ட ஆலோசகர், நாட்டில் தற்போது உள்ள 13 இலட்சம் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் ஏழரை இலட்சமாக குறைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே விரைவில் பல அரச அதிகாரிகளுக்கு பிரச்சனை காத்திருக்கிறது என ஊகிக்கலாம். கனணி மயப்படுத்தலின் பின் இவை அதிகமாகலாம். என ஜீவன் பிரசாத் என்பவர் இவ்வாறு முகநூலில் பதிவிட்டுள்ளார்.