பிரபாஸ் பட வாய்ப்பை தவறவிட்ட மாளவிகா மோகனன்

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் ‛பேட்ட, மாறன், மாஸ்டர், தங்கலான்’ ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் ‘ ராஜா சாப்’ எனும் படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் தெலுங்கில் வெளிவந்த ‛பாகுபலி’ படத்தின் பெரிய ரசிகை. இதனால் எனக்கு பிரபாஸ் உடன் இணைந்து நடிக்க வேண்டும் எனும் ஆசை இருந்தது. அந்த சமயத்தில் ‛சலார்’ படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பிரசாந்த் நீல் ஏற்படுத்தி தந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் என்னால் சலார் படத்தில் நடிக்க முடியவில்லை. இப்போது ராஜா சாப் படத்தின் மூலம் என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது” என பகிர்ந்துள்ளார்.