நயன்தாரா குறித்து மோசமாக விமர்சித்த பிரபுதேவா முதல் மனைவி

நயன்தாரா குறித்து பிரபுதேவாவின் முன்னாள் மனைவி பேசிய பழைய காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் பிரபுதேவா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் தான் நடிகர் பிரபுதேவா.

இவர், கடந்த 1995ம் ஆண்டு ரம்லத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரபுதேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறிய ரம்லத், அவருடைய பெயரை லதா என மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு மகன்களும் இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன கலைஞர் என பன்திறமை கொண்டவராக பிரபு தேவா காணப்பட்டார். இந்த நிலையில், நடிகை நயன்தாரா- பிரபு தேவா காதலித்து வந்தார்.

இதனை அறிந்த ரம்லத், அப்போது தன் கணவருக்காக போராட்டத்தில் இறங்கினார். அந்த சமயத்தில் ரம்லத்- நயன்தாரா மற்றும் பிரபுதேவா பற்றி பேசிய காணொளியொன்று தற்போது வைரலாகி வருகிறது.

கொட்டித்தீர்த்த பிரபுதேவா முதல் மனைவி
அதில், “ நயன்தாராவை என் கணவர் காதலிக்கிறார் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவர் ஒரு நல்ல கணவர். 15 ஆண்டுகளாக எங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார். அண்மையில் தான் வீடு வாங்கிக் கொடுத்தார். ஆனால் தற்போது எல்லாமே மாறிவிட்டது.

என் கணவர் நடந்து கொள்ளும் விதம் வித்தியாசமாக இருக்கிறது. அடுத்தவர்களுடைய கணவரை திருடும் பெண்ணாக நயன்தாரா இருக்கிறார். அவரை நான் எங்காவது பார்த்தால் நிச்சயம் அடிப்பேன். ஒரு பெண் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அவரே சிறந்த உதாரணம்…” என பேசியிருந்தார்.

இவர் இப்படி பேசி கொஞ்ச நாட்களிலேயே நயன்தாரா- பிரபுதேவா பிரிந்து விட்டனர். இவர்களின் உறவு முடிந்து சில ஆண்டுகளில் பிரபுதேவா ரம்லத்தை விவாகரத்து செய்தார்.

அதன் பின்னர் கடந்த 2020ல் டாக்டர் ஹிமானி சிங் என்பவரை காதலித்து 2வதாக திருமணம் செய்துக்கொண்டார். தற்போது அவர்களுக்கு பெண் குழந்தையொன்றும் இருக்கிறது. அத்துடன் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு மகன்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.