நியுயோர்க்கில் இரவுவிடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். குயின்ஸில் உள்ள இரவுவிடுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குயின்ஸின் ஜமய்காவில் உள்ள அமசுரா இரவுவிடுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.