ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக சுக்கிர பகவான் கருதப்படுகிறார். ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் தங்களுடைய ராசியை மாற்றுகின்றன. இவ்வாறு கிரகங்கள் இடம் பெயரும்போது லட்சுமி நாராயண ராஜயோகம், பத்ரா ராஜயோகம், ஹம்ச ராஜயோகம், சச மகாபுருஷ ராஜயோகம், மாளவ்ய ராஜயோகம் என ஐந்து வகையான ராஜயோகங்கள் உள்ளன. இவற்றுள் மிக முக்கியமான ராஜயோகம் மாளவ்ய ராஜயோகம். ஏனெனில் வேத சாஸ்திரங்களின்படி சுக்கிரன் மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார்.
செல்வம் மற்றும் செழிப்புக்கு கடவுளான சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் தன்னுடைய ராசியை மாற்றுவதால் மாளவ்ய ராஜயோகம் ஏற்படுகிறது. இந்நிலையில் சுக்கிரன் மீன ராசிக்குள் நுழைவதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் வரும் 2025-ம் ஆண்டில் 3 ராசியினர் அவர்களது வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தை பார்க்க இருக்கின்றனர். அந்த ராசியினர் குறித்தும் அவர்கள் பெறும் பலன்கள் குறித்தும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
ரிஷபம்: பொருளாதாரத்தின் அடையாளமாக இருக்கும் பணம், ரிஷபம் ராசியினருக்கு பல வழிகளிலும் வரப்போகிறது. புதிய வருமானத்திற்கான பல வழிகளும் இவர்களது வாழ்க்கையில் உருவாகும். மாளவ்ய ராஜயோகத்தின் காரணமாக ரிஷப ராசியினரின் கை நிறைய பணம் வரப் போகிறது. இவர்கள் வீடு, கார் வாங்குவதற்கான யோகமும் ஏற்படும். அதிக அளவிலான பணத்தினை சேமிப்பார்கள்.
தனுசு: சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தால் ஏற்படும் மாளவ்ய ராஜயோகத்தின் பலனாக தனுசு ராசிக்காரர்களும் லாபத்தை காணப்போகின்றனர். அவர்கள் பணிபுரியும் இடத்திலும் வியாபாரத்திலும் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படும். இவர்களது வாழ்வில் பண நிலைமை முன்பை விட சிறப்பாக அமையும். தனுசு ராசியினரின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். முன்பை விட அதிக அளவிலான சொத்துகளை வாங்குவார்கள்.