2025-ம் ஆண்டு திருமணத்திற்கு மிகவும் சிறந்த ஆண்டு என ஜோதிட நிபணரான மஹி காஷ்யப் கூறியுள்ளார். அனுகூலமான கிரக சீரமைப்புகளால் இந்த சாதகமான சூழலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2025-ம் ஆண்டு திருமணத்திற்கான சிறந்த ஆண்டு என்பதற்கான காரணங்களை விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவில் திருமணம் ஒரு புனிதமான சடங்காகக் கருதப்படுகிறது. இது கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்படும் உறவாக திருமணம் அமைந்துள்ளது. புத்தாண்டை நாம் கோலாகலமாக கொண்டாடி வரவேற்றுள்ளோம். இந்நிலையில் 2025-ம் ஆண்டு திருமணத்திற்கு மிகவும் சிறந்த ஆண்டு என ஜோதிட நிபணரான மஹி காஷ்யப் கூறியுள்ளார். அனுகூலமான கிரக சீரமைப்புகளால் இந்த சாதகமான சூழலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2025-ம் ஆண்டு திருமணத்திற்கான சிறந்த ஆண்டு என்பதற்கான காரணங்களை விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டு அதன் சாதகமான எண்ணியல் அதிர்வுகள் காரணமாக அதிர்ஷ்டமான ஆண்டாக கருதப்படுகிறது. எண் கணிதத்தின் படி, 2025 ஆம் ஆண்டின் கூட்டுத்தொகையாக எண் 9 உள்ளது. பொதுவாக, எண் 9 எண்கணித ஜோதிடத்தில் அதிர்ஷ்டத்தின் எண்ணாக கருதப்படுகிறது. இது மனிதாபிமானம், ஞானம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியைக் குறிக்கிறது. எனவே இந்த ஆண்டில் திருமணம் செய்யும் தம்பதிகள் ஒன்றாக வாழ்நாள் பயணத்தைத் தொடங்க சிறந்த காலமாக அமைகிறது.