சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் காவல் உதவி ஆய்வாளராக இருந்து 2019-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் சென்னை திருவான்மியூரில் உள்ள ராஜாஜி நகர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை தனது வீட்டில் காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை சித்ரா 2020 ஆம் ஆண்டு பூந்தமல்லி அருகே உள்ள ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டது அவர்களது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.