பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருந்த தர்ஷிகா மீண்டும் பிக்பாஸ் போட்டியாளர் ஒருவரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர்கள் தான் ஜெப்ரி, தர்ஷிகா.
இவர்கள் இருவரும் கடந்த வாரங்களில் குறைவான வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்கள்.
தர்ஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது விஷாலுடன் இணைந்து காதல் கண்டன்ட் கொடுத்து வந்தார். காதலர்கள் என இணையவாசிகள் விமர்சித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டார்.
அதற்கு பிறகு அன்ஷிதாவுடன் இணைந்த விஷால் சில நாட்கள் அவருடன் இருந்து வந்தார். அவரையும் கடந்த வாரம் வெளியேற்றி விட்டார்கள்.
ஜெப்ரியை சந்தித்த சீரியல் பிரபலம்
இந்த நிலையில், வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வெளியேறிய பின்னர் சக போட்டியாளர்களை நேரில் சென்று சந்தித்துக் கொள்வார்கள்.
அந்த வகையில் ஜெப்ரி கடந்த வாரம் வெளியேறினார். அவரை தர்ஷிகா நேரில் சென்று சந்தித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது.
இறுதிக்கட்டத்தை நோக்கி பிக்பாஸ் நிகழ்ச்சி சென்றுக் கொண்டிருப்பதால் 10 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது விளையாடி வருகிறார்கள்.
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் அப்போட்டிக்கு பிறகு நண்பர்களாகத் தொடர்வது பயணிப்பது கடினம் என்றாலும் சிலர் பிரபலங்கள் தங்களின் நட்பு பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
ஜெப்ரி- தர்ஷிகாவின் புகைப்படத்தை இணையவாசிகள் வைரலாக்கி வருகிறார்கள்.