உலகளவில் இதய நோயாளர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள். “இதய நோய்” என்பது ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையாகும்.
இதுவே உலகில் பெரும்பாலான மக்களின் இறப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஒரு மனிதருக்கு இதய நோய் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.
அதில் வயது, குடும்ப வரலாறு போன்ற சில காரணிகள் உள்ளடங்கும். இதய நோயின் அபாயத்தை எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களை கடைபிடித்தால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
எனவே, உங்கள் குடும்பத்தில் அல்லது பரம்பரையில் யாருக்காவது இதய நோய் இருந்தால் வயது அதிகரிக்கும் போது அதுக்குறித்து உங்கள் குடும்ப மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனைகளை எடுத்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இதய நோயை ஏற்படுத்தும் காரணிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இதய நோய் காரணிகள்
1. எலுமிச்சை நீரில் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் ஆற்றல் மேம்படுத்துவதோடு செரிமான மண்டலமும் சீராக இயங்கும். ஆரோக்கியமான நபர், காலையில் வெறும் வயிற்றில் தேன் கலந்த எலுமிச்சை நீரைக் குடிக்கும் போது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பழக்கத்தினால் இதய நோய் ஏற்படலாம். இந்த பழக்கத்தை கைவிடுவது சிறந்தது.
2. மதிய உணவு உட்கொண்ட பின்னர் சிலர் இனிப்புகள் சாப்பிடுவார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, உணவு உட்கொண்ட பின்னர் இனிப்புகளை உட்கொள்வதால் இன்சுலின் அளவு அதிகரிக்கும். இதனால் எடை உயரும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இவை அனைத்தும் இதய நோயிற்கான வழியை சீர்ப்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.
3. குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் இருந்தால் உண்ணும் உணவில் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனின் தாமதமாக உணவு உட்க் கொள்ளும் பொழுது செரிமான சீர்குலைவு ஏற்படும். இதனால் உங்களின் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் பொழுது இதய நோய் ஏற்படலாம்.
4. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைப்பார்க்கும் ஒருவருக்கு இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இப்படியானவர்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப் பார்க்கும் ஒருவருக்கு உணவில் உள்ள கொழுப்புக்கள் இரத்தக்குழாய்களில் அப்படியே படிந்து, பெருந்தமனி தடிப்பு அபாயத்தை அதிகரிக்க செய்யும்.
5. தூக்கம் என்பது ஒரு மனிதருக்கு அவசியமான ஒன்று. ஓய்வை சரியான நேரத்திற்கு எடுக்காவிட்டால் மன அழுத்த ஹார்மோன்களை அதிகரித்து, இதய ஆரோக்கியத்தை பாதிக்கப்படும். எனவே இரவு எப்போதும் சீக்கிரமாக தூங்கி காலையில் சீக்கிரமாக எழ பழக வேண்டும்.