சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் புதிய வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை இன்று (03) அறிந்து கொண்டதாகவும், அதற்கான ஆய்வின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கவுள்ளதாகவும் இலங்கை தொற்றுநோய் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.