மனோஜின் கடைக்கு முதலாளியான அண்ணாமலை…. ரோகினிக்கு அடுத்த ஆப்பு!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியிடம் சமாதானமாகிய விஜயா மீண்டும் அவரிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.

சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து கதை செல்கின்றது. குறித்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்களும் இருக்கின்றனர்.

பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமலும், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் மனோஜ் ரோகினி இருவரும் அண்ணாமலை பணத்தை எடுத்துக் கொண்டு நாடகமாடிய விடயத்தினை முத்து வெட்ட வெளிச்சமாக்கி உள்ளார்.

இதனால் விஜயா ரோகினி மீது கோபத்தில் இருப்பதுடன், மனோஜ் ரோகினி இருவரையும் பேச கூட விடாமல் தடுத்திருந்த நிலையில், தோழியின் அட்வைஸினால் மீண்டும் ரோகினியிடம் பேச ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் முத்து அப்பாவின் பணத்தில் ஆரம்பித்த ஷோரூமிற்கு தனது அப்பா தான் முதலாளி என்று கூறி அவரை முதலாளியாக அமர வைத்துள்ளார்.

மற்றொரு புறம் விஜயா ரோகினியிடம் மாமாவிடம் 27 லட்சம் பணத்தை வாங்கிக் கொடு என்று கூறி நெருக்கடி கொடுத்துள்ளார்.