விரைவில் வெளியே வரவுள்ள குணசேகரன் எதிர்பாரத திருப்பங்களுடன் எதிர்நீச்சல்!

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் விரைவில் வெளியே வரவுள்ள நிலையில், தர்ஷன் தாய் ஈஸ்வரியை மோசமாக நடத்தி வருகின்றார்.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகியது. இதில் குணசேகரனாக நடித்த மாரிமுத்து திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த பின்பு இந்த சீரியலின் கதை மிக விரைவில் நிறுத்தப்பட்டது.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்த வந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.

ஆனால் வீட்டு பெண்கள் எந்தவொரு பயமும் இல்லாமல் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கின்றனர். வீட்டில் சொத்து பிரச்சனை நடைபெற்று வருவதுடன், குணசேகரன் வெளியே வருவதற்காக ஏற்பாடும் நடைபெற்று வருகின்றது.

தர்ஷன் தனது தாய் ஈஸ்வரியை மிகவும் மோசமாக நடத்தி வருகின்றார். வெளியே போ என்று சண்டையிட்டு வரும் நிலையில், ஈஸ்வரி என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கின்றார்.

வீட்டில் பெண்கள் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று முடிவில் இருக்கும் நிலையில், ஈஸ்வரி மட்டும் வழக்கறிஞரிடம் பேசுவதற்கு சற்று யோசித்து வருகின்றார்.