கனடாவில் வாகனம் ஒன்றில் பயணம் செய்த நபர் ஒருவர் மீது டாக்ஸி சாரதி கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் குறித்த நபர் படுகாயம் அடைந்துள்ளார்.
கடந்த 31 ஆம் திகதி இரவு 8.30 மணி அளவில் நயகரா பால்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 38 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த நபர் தனது ஆறு வயது மகளுடன் வாகனத்தில் பயணம் செய்துள்ளார். வாகனத்தின் பின் இருக்கையில் மகள் அமர்ந்திருந்த வேலை 17 வயதான வாகன சாரதி குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த இருவருக்கும் இடையில் வாகனத்திற்குள் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் அது டாக்ஸிக்கு வெளியே கைகலப்பாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டாக்ஸி சாரதிக்கும் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கானவருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
குறித்த நபரை கத்தியால் குத்திய சாரதி சிறுமியுடன் வாகனத்தில் ஏறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் போலீசார் குறித்த வாகன சாரதியை மடக்கி பிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அவற்றை பொலிஸாருக்கு வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.