சகோதரிகளிடம் இருந்து வந்த சொத்து பிரச்சினைக்கு பிரபு, ராம்குமார் இருவரும் சேர்ந்து முடிவுக்கு வந்துள்ளனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
தமிழ் சினிமாவிற்கு தனக்கு என்று தனி அடையாளத்தை கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இவரின் குடும்பம் சென்னை தி நகரில் உள்ள அன்னை இல்ல வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்த வீட்டில், சிவாஜியின் குடும்பத்தினர் மட்டுமில்லாமல் அவரின் சகோதரர்கள் தங்கவேலு, சண்முகம் மற்றும் தங்கை பத்மாவதி குடும்பத்தினரும் வாழ்ந்து வந்தனர்.
இவர்களில் சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் தேன்மொழி திருமணமாகி சென்றுவிட்டதால், இந்த வீட்டிற்கு வந்து செல்வது குறைந்துள்ளது.
முடிவுக்கு வரும் சொத்து பிரச்சினை
இந்த நிலையில், 1,000 பவுன் தங்க நகைகள் மற்றும் 500 கிலோ வெள்ளி பொருட்களை ராம்குமாரும், பிரபுவும் அபகரித்துக்கொண்டனர் என்றும் அந்த சொத்தில் தங்களுக்கும் பங்குள்ள என்றும் அவரின் சகோதரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு பல முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. தற்போது இந்த சொத்துப்பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாகவும், பேச்சுவார்த்தையின் முடிவில் சில சொத்துகளை சாந்தி மற்றும் தேன்மொழி என இருவரும் பிரபு, ராம்குமார் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவுக்கு வந்துள்ளது.
இதன்படி, ராயப்பேட்டையில் உள்ள சிவாஜி ஃபிலிம்ஸ் எதிரே இருந்த இடத்தை அக்கா தங்கைகள் இருவருக்கும் சரி பாதியாக பிரித்துக் கொள்ளும்படி முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சிவாஜியின் குடும்பத்துக்குள்ள இனி சொத்துப் பிரச்சனை இருக்காது என்றும், வரும் காலத்திலும் சொத்துப்பிரச்சனை வரக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.